தளபதி 66 விஜய்க்கு ஜோடி யார்..? வில்லன் யார்.?? முழு விவரம் இதோ.!

தளபதி 66 படத்தில் பணியாற்றுபவர்கள் விவரம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

தளபதி 66 படத்தில் பணியாற்றுபவர்கள் விவரம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதியில் முடித்துவிட்டு படத்தை அடுத்த ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

unknown node

இதற்கிடையில், நேற்று முன்தினம் தளபதி 66 படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது, அதன்படி, விஜயின் 66 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனரான வம்சி பைடிபல்லி இயக்குகிறார். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தளபதி 66 படத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் குறித்த தகவல் பரவி வருகிறது.

unknown node

அந்த வகையில், தற்போது பரவி வரும் தகவல் என்னவென்றால், விஜயின் 66 -வது படத்திற்கு இசையமைப்பாளர் எஸ் தமன் இசையமைக்கவுள்ளதாவும், படத்தில் விஜய்க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாகவும் விஜய்க்கு வில்லனாக நானி நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் படத்தில் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனும், நடிகர் பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

unknown node