நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் “சூர்யா 41” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்கப்படவுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சூர்யா- பாலா கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
unknown nodeஇந்த படத்தில் நடித்து முடித்த பிறகு, சிறுத்தை, வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில மாதங்களாவே தகவல்கள் பரவி கொண்டே தான் வருகிறது.
unknown nodeஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரபல தெலுங்கு நடிகையான பூஜாஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
unknown nodeஇவர் தமிழ் சினிமாவில் முகமூடி என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஆனால் தமிழில் இவருக்கு அவ்வளவு பெரிய வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு சினிமாவிற்கு சென்று பல டாப் நடிகர்களுடன் நடித்து மிகவும் பிரபலமாகி விட்டார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.
unknown nodeஇந்த படத்தை தொடர்ந்து பூஜாஹெக்டே மீண்டும் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிப்பதன் மூலம் வருகிறார். சூர்யாவிற்கும் அவருக்கு ஜோடி நன்றாக தான் இருக்கும் என அவரது ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.