ரூ.8 கோடிக்கு விலை போன 'சுல்தான்'.! தொலைக்காட்சி உரிமையை வாங்கிய பிரபல டிவி சேனல்.!

It has been reported that Vijay TV has taken over the television rights of Karthi's Sulthan movie.

கார்த்தியின் சுல்தான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு,லால் , நெப்போலியன், ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த படத்தின் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில வெளியீட்டு உரிமைகளை வாராங்கல் ஸ்ரீனு என்பவர் கைப்பற்றி உள்ளதாக சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.இந்த நிலையில் தற்போது சுல்தான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதுவும் 8 கோடி கொடுத்து சுல்தான் படத்தினை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.