பிக்பாஸ் 5-வது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் துவக்கம்.!

It has been reported that preliminary work for the fifth season of Big Boss has begun and will air from June.

பிக்பாஸ் ஐந்தாவது சீசனுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாகவும், ஜூன் மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ் . கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் .அதன் பின் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததும் ,அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.பிக்பாஸ் சீசன் 5-ஆனது ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் , கமல்ஹாசனே ஐந்தாவது சீசனையும் தொகுத்து வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.எனவே விரைவில் சீசன் 5-ல் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் இணையதளங்களில் கசியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.