நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து தனது 66-வது படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடிக்கிறார். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.
unknown nodeஇந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்றது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட படப்பிப்பு அடுத்த வரம் தொடங்கப்படவுள்ளது.
unknown nodeஇந்நிலையில், இந்த படத்தில் விஜய்க்கு அண்ணனாக தமிழ் சினிமாவில் ஒரு காலக்கட்டத்தில் கொடி கட்டி பறந்த மைக் மோகன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விஜய்க்கு அண்ணனாக 80 காலக்கட்டத்தில் உள்ள கெட்டப்பில் நடிக்க மைக் மோகன் நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். அதைபோல் விஜய்க்கு மற்றோரு அண்ணனாக தெலுங்கில் ஒரு நடிகரையும் தேர்ந்தெடுக்க உள்ளார்களாம்.
unknown nodeமோகன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது ஹரா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்பது குறிப்பிடத்தக்கது.