இயக்குனர் ஜலீல் இயக்கத்தில் நடிகை ஹன்சிகா நடிப்பில் வெளியான 50-வது திரைப்படம் “மஹா”. இந்த திரைப்படம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸாகவில்லை. இறுதியில், ஒரு வழியாக படம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
unknown nodeஇந்த படத்தை பார்க்க பல ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஏனெனெனில், இப்படத்தில் நடிகர் சிம்புவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாகவே படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக மதுரையை சேர்ந்த சிம்பு ரசிகர்கள் கூட, 1000 அடிக்கு பேனர் வைத்திருந்தார்கள்.
unknown nodeஇத்தகைய எதிர்பார்ப்புக்கு மத்தியில், வெளியான இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படத்தில் சிம்பு 40 நிமிடம் வருவார் என நினைத்த ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் விதமாக படத்தில் அவர் வெறும் 15 நிமிடம் தான் வருகிறாராம்.
unknown nodeபடத்தின் கதை, திரைக்கதை என எதுவும் சரியில்லாத காரணத்தால், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்திதுள்ளது. அதன்படி, படம் வெளியான மூன்று நாட்களில் 3 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.