இன்னும் இரு தினங்களில் 'ஜகமே தந்திரம்' அப்டேட்.? உற்சாகத்தில் ரசிகர்கள்.!

It has been reported that the crew plans to release an update of Jagame Thanthiram in two more days.

ஜகமே தந்திரம் படத்தின் அப்டேட் இன்னும் இரு தினங்களில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இது குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ,அனைவரையும் போலவே ஜகமே தந்திரமின் திரையரங்கு வெளியீட்டையே நானும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜகமே தந்திரம் படத்தின் அப்டேட் இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது ஜகமே தந்திரம் படத்தின் டிரைலரோ அல்லது டீசரோ அல்லது படத்தின் ரிலீஸ் தேதியையோ வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.