விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்பதற்காகவே பல ரசிகர்கள் இருக்கிறார்கள். கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5- சீசன் முடிந்துள்ள நிலையில், விரைவில் 6 வது சீசன் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
unknown nodeதற்போது 6 வது சீசனுக்கான செட் அமைக்கும் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவ்வபோது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி வருவது வழக்கமான ஒன்று.
இதையும் படியுங்களேன்-உனக்கும் எனக்கும் ஆரம்பம்.. படுக்கை அறையில் ஆனந்தம்.! தமன்னா ரிலீஸ் செய்த வைரல் வீடியோ…
unknown nodeஅந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்ஷா குப்தா, ரக்சன், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, பாடகி ராஜலட்சுமி, நடிகர் கார்த்தி குமார், மோனிகா, சீரியல் நடிகை ஸ்ரீ நிதி, செய்தியாளர் ரஞ்சித், டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து, நடிகை சில்பா மஞ்சுநாத் ஆகிய 10 பேர் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவியது.
unknown nodeஇதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், பிக்பாஸ் சீசன் 6-ல் நடிகை கிரண் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் வரும் செப்டம்பர் 9-ம் தேதி பிக்பாஸ் 6-வது சீசன் புரொமோ வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.