யானை படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா.? மிரண்டு போன தமிழ் சினிமா.!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “யானை”.இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “யானை”.இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். ட்ரம்ஸ்டிக் தயாரிப்பு நிறுவனம் படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

unknown node

இந்த திரைப்படத்தில் சமுத்திரக்கனி, சரண்யா ரவி, யோகி பாபு, அம்மு அபிராமி, விஜய் டிவி புகழ், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளர்கள். குடும்ப கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஹரியின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

unknown node

கடந்த ஜூலை 1-ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு விமர்சனரீதியாவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு மிகவும் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

unknown node

இந்த நிலையில், படம் வெளியன் 4 நாட்களில் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் மட்டும் இந்த படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் 16 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.