விரைவில் 'கர்ணன்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.!

It has been reported that the first single of the upcoming Karnan film starring Dhanush will be released next week.

தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு டீசர் வெளியீட்டு தெரிவித்தனர்.

இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி  வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியிட உள்ளதாகவும் ,குறிப்பாக அடுத்த வாரத்தில் கர்ணன் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளிவரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.நேற்று கர்ணன் படத்தின் இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கர்ணன் படத்தின் இசைப்பணிகள் நடக்கும் இசைக்கருவிகளின் புகைப்படத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.