எதற்கும் துணிந்தவன் படமும், யானை திரைப்படமும் டிசம்பர் மாதம் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
unknown nodeஇசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுவென நடந்து வரும் நிலையில், படத்தை விரைவில் முடித்து விட்டு படத்தை வரும் டிசம்பர் மாதம் வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில், இதைபோல் நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
unknown nodeஇந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுவென முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
unknown nodeஇதனையடுத்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும், அருண் விஜயின் யானை திரைப்படமும் டிசம்பர் மாதம் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இதனால் ரசிகர்களுக்கு மத்தியில் இரண்டு படங்களின் மீதுள்ள