5 கோடி போட்டு பல கோடிகளை லாபம் பார்த்த நடிகை நயன்தாரா...!

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தொடர்ந்து நடித்து வரும் நடிகை நயன்தாரா தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த திரைப்படத்தை,

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை தொடர்ந்து நடித்து வரும் நடிகை நயன்தாரா தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் ‘கனெக்ட்’. இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார்.

unknown node

Connect Movie [Image Source: Twitter ]

படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வெறும் 99 நிமிடம் மட்டுமே எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் கடந்த 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதையும் படியுங்களேன் –போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் தனுஷ்…? ‘துணிவு ‘ இயக்குனர் செய்யப்போகும் தரமான சம்பவம்.!

unknown node

Connect Movie Nayanthara [Image Source: Twitter ]

படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்து வருகிறது. வெளியான இரண்டு நாட்களில் படம் 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்கள் கிருஸ்துமஸ் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

Connect Movie [Image Source: Twitter ]

இந்நிலையில், ரூ. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தை நெட்பிலிக்ஸ் நிறுவனம் ரூ. 15 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த படத்தை நயன்தாரா – விக்னேஷ் சிவனின் தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்ச்சர்ஸ் தான் தயாரித்திருந்தது. இதன் மூலமே படத்திற்கு 10 கோடி லாபம் வந்துள்ளதாக கூறப்டுகிறது.