பிக்பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்.! டாப் ஹீரோ படத்தில் பிக்பாஸ் சம்யுக்தா.!

Samyukta, who left the Bigg Boss show, is currently rumored to be teaming up for the upcoming Tughlaq Darbar film starring Vijay Sethupathi

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சம்யுக்தா தற்போது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் பிரபலமான சம்யுக்தா கார்த்திக் முதலில் மாடலாக அறிமுகமாகி ,அதன் பின் சந்திரகுமாரி என்ற சீரியலில் துர்கா என்ற கேரக்டரில் நடித்ததின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார் .இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் -4ல் கலந்து கொண்டு 56வது நாளில் வீட்டிலிருந்து வெளியேறினார் .

வீட்டிலிருந்து வெளியேறினாலும் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சம்யுக்தா தற்போது டாப் ஹீரோவின் படத்தில் இணைந்துள்ளார் .அதாவது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் துக்ளக் தர்பார் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் .அதற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் சம்யுக்தா தெரிவித்துள்ளார்.டெல்கி பிரசாத் தீனதயாளன் இயக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி,ராஷி கன்னா, பார்த்திபன், கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் . இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.