முகத்தில் தழும்புகளுடன் மிரட்டும் கங்குவா! இன்று நள்ளிரவு காத்திருக்கு சம்பவம்!

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று நள்ளிரவு 12.01க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Kanguva

கங்குவா திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று நள்ளிரவு 12.01க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கங்குவா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

இதுவரை, இப்படத்தில் இருந்து சூர்யாவின் முகத்தை காட்டாமல் படக்குழு ட்ரைலரில், அல்லது பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காமிக்கலாம் என சஸ்பென்சாக வைத்துள்ளார்களோ என்னவோ, தற்போது கங்குவா திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

unknown node

GlimpseOfKanguva [Image Source :@StudioGreen2]

மிரட்டலான போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வரும் ஜூலை 23ம் தேதி அதாவது இன்று நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை வைத்து பார்க்கையில் சூர்யாவின் தோற்றம் பயங்கரமாக இருக்கும் என தெரிகிறது.

unknown node

இந்த கங்குவா திரைப்படம் அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட 10 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  மேலும், கங்குவா திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார்.