நடிகர் சூரி உடன்பிறப்பே படத்தில் நடித்தது குறித்து ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் சூரி. தற்போது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கவுள்ளார். இதைதவிர்த்து, அண்ணாத்த, ராமின் அடுத்த திரைப்படம், வேலன், டான், உடன்பிறப்பே ஆகிய திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதில், உடன்பிறப்பே படத்தை இயக்குனர் இரா.சரவணன் இயக்குகிறார். அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தங்கையாக நடிகை ஜோதிகாவும், அண்ணனாக நடிகர் சசிகுமாரும் நடித்துள்ள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக வரும் அக்டோபர் மாதம் அமேசான் பிரேமில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், படத்தில் நடித்தது குறித்து நடிகர் சூரி தனது ட்வீட்டர் பக்கத்தில் படத்திலுள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “உடன்பிறப்பே இப்படி ஒரு குடும்பத்தில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி நன்றி இரா.சரவணன் அண்ணன்” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeமேலும், இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தில் ஒளிபதிவாளராக வேல்ராஜ் பணியாற்றியுள்ளார்.