சிம்புவுக்கு வில்லனாகும் கெளதம் மேனன்... படம் மிரட்டலா இருக்கும் போல..!

director Gautam Vasudev Menon will play the villain in the upcoming film 'Pattu Thala' directed by Krishna and starring Simbu and Gautam Karthik

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகவுள்ள ‘பத்து தல ” திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நார்தன் இயக்கத்தில், சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி ஆகியோர் நடிப்பில் உருவாகி கடந்த 2017-ம் ஆண்டு ஹிட்டடித்த திரைப்படம் மஃப்டி. தற்போது இந்த படத்தை ‘பத்து தல “எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது . ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படத்தினை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார் .

இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். அதிலும் கௌதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று தகவல்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் வில்லனாக இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் கிருஷ்ணா இயக்குனர் கெளதம் மேனனுடன் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.