அந்த மனசுதான் சார் கடவுள்...உதவின்னு கேட்டா வாரி கொடுக்கும் ஜி.வி.பிரகாஷ்.!

G.V.Prakash: சமூக வலைத்தளம் மூலம் உதவி கேட்ட விவசாயி மகனுக்கு பணம் அனுப்பிய நடிகர் ஜி.வி.பிரகாஷை பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுவாக பெரிய நடிகர்கள் பலரும்

G.V.Prakash Kumar

G.V.Prakash: சமூக வலைத்தளம் மூலம் உதவி கேட்ட விவசாயி மகனுக்கு பணம் அனுப்பிய நடிகர் ஜி.வி.பிரகாஷை பலரும் பாராட்டி வருகின்றனர். பொதுவாக பெரிய நடிகர்கள் பலரும் தனது ரசிகர்களை வைத்து மக்களுக்கோ அல்லது தனது ரசிகர்களுக்கோ உதவி செய்வது வழக்கம். ஆனால், இதனை விட சற்று வித்தியசமாக சமூக வலைத்தளங்கள் மூலம், உதவி கேட்கும் ஏழைகளுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கவனத்தை ஈர்த்துள்ளார்.

READ MORE –அசுர ஓட்டம்! 100 கோடியை நெருங்கிய ‘மஞ்சும்மல் பாய்ஸ்’!

அனைவரும் பயன்படுத்தும் சமூக வலைதளமான X தள பக்கத்தில் மெர்சல் குமார் என்பவர், தனக்கும், தன் தந்தைக்கும் உடுத்த உடை வேண்டும் என ஜி.வி.பிரகாஷிடம் கேட்க, உடனே ஜி.வி.பிரகாஷ், அவரது கூகுள் பேஎண்ணுக்கு ரூ.6,000 அனுப்பி வைத்தார். இதற்கு நன்றி தெரிவித்த மெர்சல் குமார், ஜி.வி.பிரகாஷ் உடனான கலந்துரையாடலை X தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

READ MORE –அது சரியில்லை மாத்துங்க! ‘கங்குவா’ படத்தை பார்த்து வருத்தப்பட்ட சூர்யா!

இது குறித்து மெர்சல் குமார் தனது X தள பக்கத்தில், ‘நான் ஒரு விவசாயி வீட்டு பையன் எனக்கு மற்றும் எனது தந்தைக்கு உடுத்த உடை வாங்க உதவி செய்த ஜி.வி.பிரகாஷ் அண்ணாவிற்கு மிக்க நன்றி. உடை வாங்க ரூ.6000 உதவி செய்யதார்க்கு நன்றி அண்ணா, உங்கள் உதவியை ஒரு போதும் மறக்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

unknown node

READ MORE –அது சரியில்லை மாத்துங்க! ‘கங்குவா’ படத்தை பார்த்து வருத்தப்பட்ட சூர்யா!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இவ்வாறு உதவி செய்வது இது முதல் முறையல்ல, இது போன்ற பலருக்கு உதவி கரம் நீட்டியுள்ளார். அண்மையில், சமூக பயனர் ஒருவர் சிறுவனின் மூளைக்கு அருகில் உள்ள கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற நிதியுதவி கோரி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து உதவி கேட்டவருக்கு தன்னுடன் பங்காகஜி.வி.பிரகாஷ், 75,000 ரூபாய் அனுப்பி உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.