தளபதி 65 படத்தின் வெறித்தனமான அப்டேட்..!

It has been reported that thalapathy 65 will be working as an advertising designer for the film

தளபதி 65 படத்திற்கு விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், தளபதி-65 படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாக அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் தளபதி 65 படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் வடிவமைப்பாளர் கோபிபிரசன்னா  இந்த பாடதிற்கு விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.