சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட்..!!

The second phase of shooting for 'Don' will start on the 22nd in Chennai.

டான் படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகின்ற 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்.

இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

கல்லூரி பின்னணியில் உருவாகும் டான் படத்தில் நடிகரும், இயக்குனருமான எஸ்ஜே சூர்யா மற்றும் நடிகை பிரியங்கா அருள் மோகன், நடிகர் சூரி, நடிகர் சமுத்திரக்கனி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி தொடங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படத்திற்கான முதற்கட்டட படப்பிடிப்பு கோயம்புத்தூரில் முடிந்துள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பு எப்போது நடைபெறுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது ஆம், டான் படத்திற்கான இரண்டாவது கட்ட படப்பிடிப்பு வருகின்ற 22 ஆம் தேதி சென்னையில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு வெறித்தனமான அப்டேட்..!!