இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் நடிகர் அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள குருதி ஆட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் ஹீரோவாக வலம் வரும் நடிகர் அதர்வா கடைசியாக “100” எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் . தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் குருதி ஆட்டம் . இந்த படத்தை 8 தோட்டாக்கள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் அறிமுகமான ஸ்ரீ கணேஷ் இயக்குகிறார் . இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் மேலும் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
ராதிகா சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் புதிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆம் இந்த குருதி ஆட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
unknown node