ஆயிரத்தில் ஒருவன்-2விற்கு நான் தான் மியூசிக்.! துண்டு போட்டு சீட் பிடித்த ஜீவி.!

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கார்த்தி, ரீமா சென், பார்த்திபன், ஆண்ட்ரியா ஜெரமையா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவர். இத்திரைப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ராம்ஜி பணியாற்றியுள்ளார்.
இந்த திரைப்படம் வெளியான ஆண்டில் மக்களிடம் சரியாக சேரவில்லை என்றே கூறலாம். அடுத்தாக ரீ ரிலீஸ் செய்தவுடன் அனைவரும் வியந்து செல்வராகவன் மற்றும் படக்குழுவை பாராட்டினார்கள் என்றே கூறலாம்.
முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 2024-ஆம் ஆண்டு தொடங்கும் எனவும் அதில் நடிகர் தனுஷ் நடிப்பார் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன் 2 விற்கு இசையமைப்பாளர் நீங்களா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து அவர் கூறியது ” ஆயிரத்தில் ஒருவன் 2 படத்திற்கு என்னை அழைத்தாள் கண்டிப்பாக இசையமைப்பேன்…என்னை கூப்டற மாதிரி தான் சொல்லுறாங்கள்..அந்த படம் தொடங்கி..தயாரிப்பாளர் சரியாக அமைந்து படத்தை கையெழுத்துசெய்வது வரை நான் கிடையாது..கண்டிப்பாக நான் படத்தில் இருக்க 90% வாய்ப்பு இருக்கு” என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025