விக்ரம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை..! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு.

கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிப்பு.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடித்துவிட்டு படத்தை தீபாவளி அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.

unknown node