கர்ணன் படத்தில் முதல் நாள் வசூல்..!! எத்தனை கோடி தெரியுமா..??

Karnan movie released yesterday has collected 10.40 crores in Tamil Nadu on the first day

நேற்று வெளியான கர்ணன் திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் 10.40 கோடி வசூல் செய்துள்ளது.

தனுஷ் நடிப்பில் அனைத்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த கர்ணன் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் மிக சிறந்த விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் தற்போது வெளியான முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆம் வெளியான முதல் நாளிலே இந்த திரைப்படம் 10.40 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் தனுஷிற்கு முதல் நாளில் அதிகம் வசூல் செய்த முதல் தமிழ்  திரைப்படம் என்ற சாதனையும் படைத்துள்ளது.

இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகி பாபு, நட்டி நடராஜன், கௌரி கிஷன், லால் போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.