தி நைட் – முதன்முதலாக கதாநாயகி ஆகிறார் பிக் பாஸ் சாக்ஷி அகர்வால்!

Bigg Boss Sakshi Agarwal, who has so far acted as a supporting actress, is currently set to play the lead role in The Night.

இதுவரை துணை நடிகையாக நடித்து வந்த பிக்பாஸ் சாக்ஷி அகர்வால் தற்போது கதாநாயகியாக தி நைட் எனும் படத்தில் நடிக்க உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகிய தமிழ் திரைப்பட துணை நடிகைதான் சக்ஷி அகர்வால். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் ஒரு படத்திலும் அவர் நாயகியாக நடிக்கவில்லை. அண்மையில் கூட ஆர்யாவுடன் இணைந்து டெடி எனும் படத்தில் நடித்து வந்த நிலையில், தற்போது சாக்ஷி அகர்வால் கதாநாயகியாக நடிக்க கூடிய படமொன்றின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த படத்திற்கான பெயர் தி நைட் என அறிவிக்கப்பட்டு போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் இவருடன் விது என்பவர் நாயகனாக நடிக்கிறார் என கூறப்பட்டுள்ளது. ரங்கா புவனேஸ்வர் அவர்கள் இயக்கக்கடிய இந்த படத்தில் பல புதுமுக நடிகர்கள் அறிமுகமாக இருக்கிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் மீடியமான பட்சத்தில் குட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாக்ஷி அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சாக்ஷிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.