கன்னியாக்குமரி மாவட்டம், களியக்காவிளை பகுதியில் உள்ள ரிச்சுதமீன்ஸ் தியேட்டரில், எமன்டன் பிரேமகதா என்ற மலையாள படம் ஒளிபரப்பானது. இதனை பார்ப்பதற்காக பல ரசிகர்கள் கூடியிருந்தனர்.
unknown nodeஇந்நிலையில், திடீரென ஆபரேட்டர் அறையில் தீ விபத்து ஏற்பட்டு பயங்கர புகை கிளம்பியுள்ளது. இதனை பார்த்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். தியேட்டரில் இருந்த ஊழியர்கள், தீ அணைப்பான்கள் மூலம் புகை கிளம்பிய பகுதியில் அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வராததால், தீ அணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைந்து அணைத்து, கட்டுக்குள் கொண்டு வந்தனர்.