சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.! விரைவில் அப்டேட்.?

நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 41-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில்

நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 41-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிக்கின்றார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமாரியில், பூஜையுடன் தொடங்கப்பட்டு அங்கு செட் அமைத்து விறு விறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில்  தற்போது கன்னியாகுமரியில் தொடங்கப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், இரண்டாம் கட்ட படப்பிப்பு அடுத்த மாதம் கோவையில் 15 நாட்கள் நடைபெறும் எனவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாதம் படத்தி எடிட்டிங் பணிகள் நடைபெறும் என்பதால் படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node