அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?
ஆங்கரிங் பிரச்சனை பிரச்னை பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், இதற்கு நடுவே மணிமேகலை கெத்தாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், பேசுபொருளாகியும் இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்துகொண்டால் அதனுடைய வேலையை மட்டும் தான் அனைவரும் செய்வார்கள்.
ஆனால், அதற்கு மாறாகப் பிரியங்கா மணிமேகலை செய்யவேண்டிய வேலையை அவரை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தைச் செலுத்தினார். இதன் காரணமாக நிகழ்ச்சியில் மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் இடையே மனக் கசப்பு ஏற்பட்ட நிலையில், நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக வேதனையுடன் மணிமேகலை அறிவித்திருந்தார்.
சாதாரணமாக அவர் நிகழ்ச்சியை விட்டு விலகுகிறேன் எனக் கூறியிருந்தால் கூட இந்த விஷயம் இவ்வளவு பெரிய விஷயமாக மாறியிருக்காது. ஆனால், மணிமேகலை காரணத்தையும் வெளிப்படையாகவே தெரிவித்த காரணத்தால் இவ்வளவு பெரிய விஷயமாக வெடித்துள்ளது. இதில் பலரும், மணிமேகலைக்குப் பிரபலங்கள் பலரும் ஆதரவாக, குரல் கொடுத்து பிரியங்காவைத் திட்டி வருகிறார்கள்.
மற்றொரு பக்கம் பிரியங்காவுக்கும் ஆதரவு தெரிவித்து அவருடைய பக்கமும் பிரபலங்கள் நின்று வருகிறார்கள். இந்த பிரச்சனைக்கு எப்போது முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. இந்த பிரச்சனை ஒரு பக்கம் சூடாக அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், மணிமேகலை கெத்தாகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு எதைப்பற்றியும் கவலைப் படாமல் கெத்தாக போஸ் கொடுத்து அதற்கான எமோஜி ஒன்றையும் பதிவிட்டு இருக்கிறார். அந்த எமோஜியின் மூலம் எந்த பிரச்சனையும் என்னை எதுவும் செய்யவில்லை கெத்தாக இருக்கிறேன் என்பதையும் மற்றொரு எமோஜி அன்பை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதால் ரசிகர்கள் தனக்கு ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் அப்படிப் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பரபரப்பாக போய்க்கொண்டு இருக்கும் ஆங்கரிங் பிரச்சனைக்கு நடுவே பிரியங்கா மௌனம் காத்து வரும் நிலையில், மணிமேகலை தைரியமாக இப்படியான புகைப்படங்களை வெளியீட்டு வருவது அவருடைய செல்வாக்கை அதிகப்படுத்தி வருகிறது. அவருடைய புகைப்படத்தை பார்த்த பலரும், மணிமேகலை Rocked பிரியங்கா Shocked என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025