சென்னை :மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருடைய பிரச்சனை இன்னும் நின்றபாடு இல்லை. இவர்களுடைய பிரச்சனை குறித்து பிரபலங்கள் பலரும் தொடர்ச்சியாக தங்களுடைய கருத்துக்களைக் கூறி வரும் நிலையில், பிரச்சனை முடிவு இல்லாமல் பேசுபொருளாகிக்கொண்டு இருக்கிறது. அது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் பிரியங்காவும் இது பற்றி எந்த ரியாக்சனும் கொடுக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
அதன் காரணமாகவும், இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்காமல் எங்கு முடியும் என்பது போலப் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தில், சின்னதிரையைச் சேர்ந்த அனிதா சம்பத், ஐஸ்வர்யா தத்தா, மோனிஷா,உள்ளிட்ட பலரும் மணிமேகலைக்கு ஆதரவாகப் பேசிய இருந்தார்கள். அவர்களைப் போல, ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் மணிமேகலைக்குத் தான் ஆதரவாகப் பேசி பிரியங்காவைத் திட்டி வருகிறார்கள்.
மற்றொரு பக்கம், பிரியங்காவின் ரசிகர்கள் உண்மை என்னவென்று தெரியாமல் எதுவும் பேசி பிரியங்காவைத் திட்டவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டு வருகிறார்கள். ரசிகர்களைத் தொடர்ந்து, பிரபலங்களும் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக, சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பூஜா வெங்கட் பிரியங்காவைத் திட்டவேண்டாம் எனச் சூசகமாக ஆதரவு கொடுத்திருந்தார்.
read more-“உண்மை தெரியாம பேசாதீங்க”…பிரியங்காவுக்கு ஆதரவாக பேசிய பூஜா?
அவரை தொடர்ந்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் கலந்து கொண்ட நடிகை பாவனி பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டா கணக்கு பக்கத்தில் “INSECURITY” NOT DOMINANCE TRUTH WILL PREVAIL” என்று கூறியுள்ளார். “INSECURITY” வார்த்தையை அவர் பயன்படுத்திய காரணமே, மணிமேகலைக்கு பிரியங்காவின் திறமையை பார்த்து பயம் இருப்பதாக கூறுவதற்கு தான்.
unknown nodePavani Reddy insta story [file image]அதாவது மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது அவருடைய திறமை மீது நம்பிக்கை இல்லை என்பதற்காக தான் எனவும், பிரியங்கா திறமையைப் பார்த்து அவர் பயப்படுவது போலக் கூறியுள்ளார். பிரியங்கா ஆதிக்கம் செலுத்த நினைக்கும் ஒரு ஆள் இல்லை எனவும், உண்மை ஒரு நாள் வெளிய வரும் நான் பிரியங்கா பக்கம் நிற்கிறேன்” எனவும் பாவனி கருத்து தெரிவித்துள்ளார்.
இவர் பிரியங்காவுக்கு ஆதரவாக, பேசியதைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் உங்களுக்கு ரொம்பவே நெருக்கமானவர் என்பதால் அவருக்கு ஆதரவாகப் பேசுகிறீர்கள் எனவும், மற்றொரு பக்கம் பாவனி சொல்வது சரி தான் எனவும் கூறி வருகிறார்கள்.
