விக்னேஷ் சிவன் முன்பே ‘ஐ லவ் யூ’ சொன்ன ரசிகர்கள்…நயன்தாரா சொன்ன பதில்.!

நடிகை நயன்தாரா தற்போது நடித்து முடித்துள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை, இதற்கு முன்பு நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். படத்தை விக்னேஷ் சிவன் தனது ரௌடி பிக்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும்நிலையில், படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதற்கு தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா வந்திருந்தார். அவர்களுடன், ஸ்ருதிகா, பவித்ரா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

நயன்தாரா வருவதை அறிந்த ரசிகர்கள் அவரை பார்ப்பதற்காக கூட்டமாக கூடினார்கள். அப்போது நயன்தாரா திரையரங்கிற்குள் செல்லும் போது ரசிகர்கள் பலர் நயன்தாராவை பார்த்து ஹாய் மேடம்…. “ஐ லவ் யூ” என விக்னேஷ் சிவன் முன்பே கத்தினார்கள். ரசிகர்கள் தன் மீது வைத்திருந்த அன்பை புரிந்துகொண்ட, நயன்தாராவும் “லவ் யூ” என பதில் அளித்தார்.

அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், நடிகை நயன்தாரா‘கனெக்ட்’ திரைப்படத்தை தொடர்ந்து ஷாருக்கனுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்னேஷ் சிவன் முன்பே ‘ஐ லவ் யூ’ சொன்ன ரசிகர்கள்…நயன்தாரா சொன்ன பதில்.!#Nayanthara | #VigneshShivan | #Connect pic.twitter.com/BPn5ayjfEb
— CineBloopers (@CineBloopers) December 20, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024