யுவன் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் வலிமை இரண்டாம் பாடல் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் 5 நாட்கள் மட்டும் படமாக்கப்படவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்திலிருந்து மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக படத்திலிருந்து கடந்த 2-ஆம் தேதி “நாங்க வேற மாறி” என்ற பாடல் வெளியானது. இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி இசையமைப்பாளர் யுவன் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் வலிமை இரண்டாம் பாடல் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்துள்ளனர்.