வலிமை அப்டேட் கேட்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் – போனிகபூர்- ஹெச் வினோத் – யுவன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேசி நடித்துள்ளார். மேலும், புகழ், யோகி பாபு, கார்த்திகேயா, சுஜிதா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் டைட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட கொடுக்காததால் அஜித் ரசிகர்க சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களிடன் வலிமை அப்டேட் கேட்டனர்.
unknown nodeஇதனால் கடந்த ஜூலை மாதம் படத்தின் மோஷன் போஸ்ட்டரை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டார். அடுத்ததாக படத்தின் முதல் பாடல் மற்றும் வலிமை glimpse ஆகிய அப்டேட்டை கொடுத்தனர்.
unknown nodeஇந்நிலையில், அஜித்தின் 61-வது திரைப்படத்தையும், ஹெச் வினோத் இயக்கவுள்ளதாகவும், தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் போனிகபூர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ” வலிமை திரைப்படத்தின் glimpse -க்கு அருமையானவரவேற்பு கிடைத்துள்ளது.. 6 நாள் சண்டை காட்சிக்கு ஓராண்டு மேலாக காத்திருந்தோம் … அந்த காட்சிகள் சரியாக வேண்டும் என்பதில் அஜித் தீவிரமாக இருந்தார்… அவர் மீது அதிக அன்பு வைத்திருக்கும் ரசிகர்கள் படம் குறித்த அப்டேட் கேட்க அவர்களுக்கு உரிமை உண்டு” அஜித்தின் ரசிகர்கள் அவர் மேல் வைத்திருக்கும் பாசத்தை போல் வேறு எந்த நடிகருக்கும் இருப்பதை நான் பார்த்ததில்லை. என கூறியுள்ளார்.