விக்ரம் படத்தில் இணைந்த பிரபல ஸ்டண்ட் இயக்குனர்கள்..!!

Popular stunt directors Anbariv have teamed up for the upcoming Vikram film starring actor Kamal Haasan.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் பிரபல ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவ் இணைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் மாநகரம் , கைதி, மாஸ்டர் என மூன்று வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் கமல் ஹாசனை வைத்து விக்ரம் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் . ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் முடித்துவிட்டு படத்தை தீபாவளி அன்று வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இணைந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே கேஜிஎஃப்1, கைதி , சண்டக்கோழி, கபாலி, மெட்ராஸ் ஆகிய படங்களில் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node