கொரோனாவுக்கு பலியான பிரபல சீரியல் நடிகை.!

Popular serial actress Divya Patnaik, who was treated for corona, has passed away.Many have expressed their condolences for his death.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல சீரியல் நடிகையான திவ்யா பட்னாகர் தற்போது உயிரிழந்துள்ளார்.

பிரபல சீரியல் நடிகையான திவ்யா பட்னாகர் தற்போது இந்தியில் Yeh Rishtey Kya Kehlata Hai என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் .கடந்த நவம்பர் மாதம் இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக வென்டிலேட்டர் உதவியால் சுவாசித்து வந்த இவர் இன்ஸ்டாகிராமில் தான் மீண்டு வர பிரார்த்தனை செய்யுமாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று திவ்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இது ரசிகர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்த நடிகர், நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .மேலும் திவ்யாவின் நெருங்கிய நண்பர்களும்,நடிகையுமான தேவோலீனா பட்டாச்சார்ஜி மற்றும் ஷில்பா ஷிரோட்கர் ஆகியோர் திவ்யாவுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் என்று கூறி தங்களது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.மேலும் பலர் தங்களது இரங்கல்களை அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

unknown nodeunknown node
கொரோனாவுக்கு பலியான பிரபல சீரியல் நடிகை.!