புது காரில் சிவகாசிக்கு சென்ற புகழை சூழ்ந்த ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ.!

The video of Cook with comali fame pugazh surrounded by fans around his car when he went to Sivakasi ihas gone very viral on social media sites.

குக் வித் கோமாளி புகழ் புதுகாரில் சிவகாசி சென்ற போது அவரது காரை சுற்றி ரசிகர்கள் சூழ்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ்.தனது காமெடியால் அனைவரையும் கவர்ந்துள்ள இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.சமீபத்தில் இவர் அருண் விஜய்யின் 33-வது படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.அதன் பின் தல அஜித்தின் வலிமை,தளபதி 65, சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களிலும் புகழ் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் இவர் 17 லட்சம் மதிப்பிலான காரை வாங்கியுள்ளதாகவும்,தனது பரம்பரையிலையே முதல் கார் என்றும் தனது மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார் .இந்த நிலையில் புகழ் தனது புது காரில் சிவகாசிக்கு சென்றுள்ளார்.அப்போது அவரை காரை ரசிகர்கள் சூழ்ந்து கொள்ள புகழ் அவர்கள் அனைவரது கையையும் பிடித்து அன்பை பரிமாறி கொண்டார் .அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node