சியான் 60 படத்தின் அடுத்த அப்டேட்..! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

The official announcement has been made that Vivek Harshan has joined as the editor in the Sion 60 film

சியான் 60 படத்தில் எடிட்டராக விவேக் ஹர்ஷன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சியான் 60. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஷெரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றுகிறார். மேலும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 10 தேதி முதல் தொடங்கப்பட்டது. இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார்.

நடிகை சிம்ரன், பாபி சிம்ஹா, வாணிபோஜன் , சனந்த் ரெட்டி , முத்துக்குமார் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். படத்தில்  ஒளிபதிவாளரான ஸ்ரேயாஸ் கிருஷ்ணா பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் எடிட்டராக விவேக் ஹர்ஷன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

unknown node