மணிரத்னத்தின் 'நவரசா' வெப் தொடரிலிருந்து விலகிய பிரபல இயக்குனர்.!

It has been reported that director KV Anand has left the Navaratha web series being produced by Mani Ratnam and he will be directed by Vasanth.

மணிரத்னம் தயாரித்து வரும் நவரசா வெப் தொடரிலிருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகி உள்ளதாகவும் ,அவருக்கு வசந்த் என்பவர் இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.அதன் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நவரசா எனும் வெப் தொடரையும் தயாரித்து வருகிறார்.நெட்பிளிக்ஸ் தளத்திற்காக உருவாகி வரும் இந்த வெப்தொடரை 9 இயக்குனர்கள் இணைந்து 9 பகுதிகளாக இயக்க வருகின்றனர்.

ஆம் இயக்குனர் ரவீந்திரன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்பராஜ்,ஹலீதா ஷமீம்,பொன்ராம் , கௌதம் மேனன்,பிஜாய் நம்பியார் ,கேவி ஆனந்த் ஆகிய 9 இயக்குனர்கள் இணைந்து இயக்கி வருகின்றனர்.இதன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த வெப் தொடரிலிருந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் விலகி உள்ளதாக தெரிகிறது.எனவே அவருக்கு பதிலாக நவரசா வெப் தொடரின் ஒரு பகுதியை வசந்த் இயக்க உள்ளதாகவும், அவர் இயக்கும் பகுதியில் அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

unknown node