தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் காலமானார்....! அதிர்ச்சியில் திரையுலகம்...!

Famous director and cinematographer KV Anand has died of a heart attack.

பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக  காலமானார்.

சமீப நாட்களாக திரையுலகில் பிரபலங்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்து வருவது திரையுலகை சற்று கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், பிரபல இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கொரோனா தொற்று காரணமாக  சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் உள்ள அவரது உடல் காலை 9 மணிக்கு மேல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், பின் சென்னை அடையாரில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்து வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர், கணா கண்டேன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.