மீ டு இயக்கத்தினால் பெண்களை வேலைக்கு சேர்க்க பயமாக இருக்கிறது !!!பிரபல இயக்குநர் லால் ஜோஸ் ஓபன் டாக் !!!

Default Image

பிரபல மலையாள இயக்குநர் லால் ஜோஸ் , மம்முட்டி, மோகன்லால், பஹத் பாசில், துல்கர் சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ளார். இவரின் படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் மீ டு  இயக்கத்தை இயக்குநர் லால் ஜோஸ் விமர்ச்சித்திருந்தார். மேலும் அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய படப்பிடிப்பில் புகைப்பட கலைஞர் மீது  பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார்.

ஆனால் அந்த வழக்கை விசாரித்த போது அது முற்றிலும் ‘ பொய் குற்றச்சாட்டு ‘ என்பது தெரிய வந்தது. தற்போது மீ டூ பற்றி அதிகம் பேசுகிறார்கள் . இந்த இயக்கம்  மிக வேகமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் எனக்கு மீ டு இயக்கத்தின் மீது பயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெண்களை எனது படப்பிடிப்பு குழுவில் வேலைக்கு சேர்க்க எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.  இயக்குநர் லாலின் இந்த கருத்திற்கு மலையாள நடிகைகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்