டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில், நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைத் தவிர, பல விஷயங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன. இதில், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு, நடிகைகள் பலரும் வரவேற்பு அளித்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று சினிமா பிரபலங்களான தமன்னா, மஞ்சு லட்சுமி, குஷ்பு உள்ளிட்ட பலர் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வருகை தந்தனர். புதிய நாடாளுமன்றத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமன்னா, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
unknown nodeWomenEmpowerment [Image source : @khushsundar]
மேலும் அவர், இந்த மசோதா மூலம் பெண்களின் அரசியல் விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றும் இது சாமானியர்களையும் அரசியலில் சேர ஊக்கமளிக்கும் என்றார்.இதை தவிர நடிகை குஷ்பு சமூக வலைதள பக்கத்தில், 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் இடஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் சமர்ப்பிக்கப்பட்டதை நேரில் பார்த்த பெருமை கிடைத்தது என பதிவிட்டுள்ளார்.
unknown node