சம்பளத்தை வாங்க மறுத்த பிரபல நடிகை !!!

Default Image

நடிகை சாய்பல்லவி மாரி -2 படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்தவர். இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் அவர் தெலுங்கில் ‘படி படி லேச்சு  மனசு ‘என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தை ஹனுராகவபுடி இயக்கியுள்ளார்.

இந்த படம் சமீபத்தில் வெளி வந்தது. மேலும் ‘ படி படி லேச்சு  மனசு ‘ படம் ரூ 22 கோடிக்கு வியாபாரம் ஆனது. ஆனால்  படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் தர வில்லை. ரூ 8 கோடி மட்டுமே வசூல் ஆனது. எனவே தயாரிப்பாளர்கள்,தியேட்டர் உரிமையாளர்கள் ,விநியோகஸ்தர்களுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டது.

‘ படி படி லேச்சு  மனசு ‘படத்தின் சம்பளத்தின்  ஒரு பகுதியை  சாய்பல்லவி தயாரிப்பாளரிடம் ஏற்கனவே முன்பணமாக வாங்கி இருந்தார். மேலும் அவரது சம்பளத்தின் மீதி தொகையை  படம் திரைக்கு வந்தவுடன் தருவதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார். இந்நிலையில் படம் நஷ்டமானதால் நடிகை சாய்பல்லவி மீதி பணம் ரூ 40 லட்சத்தை தயாரிப்பாளரிடம் வாங்க மறுத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்