சினிமா திரையுலகை பொறுத்தவரையில் திருமணம் என்பது ஒரு சாதாரணமாக விடயமாக போய்விட்டது. இந்நிலையில், அமெரிக்க நடிகரான நிக்கோலஸ் கேஜ் என்பவர் தனது 55-வது வயதில் நான்காவது திருமணம் செய்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி, நிக்கோலஸ் கேஜ்க்கும், மேக்கப் கலைஞர் எரிகா கோய்கேவுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால், இவர்கள் இருவரும் திருமணமாகி நான்கு நாட்களிலேயே பிரிவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், எரிகா கோய்கே தனது கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்திருந்த இலையில், அதற்கான செலவையும் அவரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.