அண்ணியுடன் இணைந்து நடிக்கும் பிரபல நடிகர்! வாழ்த்து கூறிய அண்ணன்!
தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சகோதரர்களாக இணைந்து கலக்கி வருவது நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி. இவர்கள் இருவரின் படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி தனது அண்ணனின் மனைவியான ஜோதிகாவுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கும் இந்த படத்தில் கார்த்தியும், ஜோதிகாவும் அக்கா- தம்பியாக நடிக்கவுள்ளனர்.
இதனையடுத்து, நடிகர் கார்த்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், “முதல்முறையாக அணியுடன் இணைந்து நடிக உள்ளேன். உங்கள் அனைவரின் ஆசியுடன் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்குகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த நடிகர் சூர்யா, “இது ஒரு சிறப்பான தருணம். உன்னையும், ஜோவையும் திரையில் ஒன்றாக பார்ப்பது உற்சாகமாக உள்ளது. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.” என பதிலளித்துள்ளார்.