12 வயது மூத்த நடிகையை காதலிக்கும் பிரபல நடிகர் -அதிர்ச்சியில் ரசிகர்கள்
சினிமாவில் தற்போது வயது மூத்த நடிகைகளை காதலித்து திருமணம் செய்வது டிரெண்ட் ஆகி விட்டது. தற்போது சமீபத்தில் இந்த சர்ச்சையில் நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோடி சிக்கி ரசிகர்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகினர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அர்ஜுன் கபூர்-மலைக்கா அரோரா ஜோடி சிக்கியுள்ளனர். அதில் நடிகர் அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது அதிகமான பெண்ணை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகை மலைக்கா அரோரா ஏற்கனவே விவகாரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக சேர்த்து எடுத்த புகைப்படத்தை அவர்களது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போது தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.