தளபதி 65 அப்டேட்: விஜய்க்கு வில்லனாகும் பிரபல நடிகர்...??

It has been reported that actor Nawazuddin Siddiqui will play the villain in Vijay in Commander 65.

விஜய்க்கு வில்லனாக நடிகர் நவாசுதீன் சித்திக் தளபதி 65 யில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் பூஜையுடன் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நவாசுதீன் சித்திக் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், தற்போது அவர் வில்லனாக நடிப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.