இன்றைய காலகட்டத்தில், இணையவழி திருட்டு என்பது பெருகி வருகிறது. அது புதுப்படமாக இருந்தாலும் சரி, வங்கி கணக்கு, மற்ற இணைய சேவை என அனைத்திலும் திருட்டு நடைபெறுகிறது. இதற்க்கு தீர்வு காணவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கேரளா மாநிலம், கொச்சியில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட.நடிகை நஸ்ரியா, மற்றும் அவரது கணவர் பகத் பாசில் ஆகிய இருவரும் கருத்தரங்கை தொடங்கி வைக்க மேடை ஏறினர். அதில் பேசிய பகத் பாசில், இந்த கருத்தரங்கை நான் தொடங்கி வைக்கிறேன் இதற்கப்புறம்.எனது மனைவி பேசுவார் என நஸ்ரியாவை மாட்டிவிட்டார். இதனை எதிர்பார்க்காத நஸ்ரியா, தான் பேசும்.போது, எனது மாற்றி கொண்டு இருக்கிறேன் அதலால் பகத் பேசுவார் எனகூற அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.
இன்டெர்நெட் திருட்டை திரைத்துறை எதிர்த்து கொண்டிருக்கிறது. வங்கி, கல்வி, சினிமா, வர்த்தகம் என அனைத்திலும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இப்பேது நடந்து கொண்டிருக்கும் கருத்தரங்கு உலக அளவில் பெரியது. இந்த கருத்தரங்கு மூலம் ஒரு தீர்வு காண வேண்டும். என தனது பேச்சை முடித்தார் பகத் பாசில்.
DINASUVADU