அடுத்தாக ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் சிவகார்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “டான்” படத்திற்காக காத்துள்ளனர். இந்த படத்தை அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.
unknown nodeபடத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை, பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, சூரி, சமுத்திரக்கனி, கலையரசு, சிவாங்கி, போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
unknown nodeபடத்தை லைக்கா நிறுவனமும், சிவகார்த்திகேயன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத் துள்ளார். இந்த படம் வரும் மே 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து படத்திற்கான ப்ரோமோஷன் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
unknown nodeஇதற்கிடையில், இன்று இரவு 7-மணிக்கு டான் படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று சிவகார்த்திகேயன் வெளியிட்டார். அதில் சிபி சக்கரவர்த்தி, எஸ்.ஜே.சூர்யா, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினரை மட்டும் டேக் செய்திருந்தார்.
unknown nodeபிரபல இயக்குனரும்,நடிகருமான மனோ பாலாவை டேக் செய்யவில்லை.இதனால், மனோ பாலா சிவகார்திகேயன் ட்வீட்டை ஷேர் செய்து எங்கப்பா என் பேரு…?? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
unknown node