பொங்கல் தினத்தில் மாஸ்டருடன் மோதும் ஈஸ்வரன்..!

Eeswaran, directed by Suchindran and starring Simbu, will be released on January 14, Simbu announced on his Twitter page.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் வருகின்ற ஜனவரி மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஈஸ்வரன் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.

படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டீஸர் படத்தின் முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஈஸ்வரன் திரைப்படம் வருகின்ற ஜனவரி மாதம் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று நடிகர் சிம்பு தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனவரி 13ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில் அதற்கு அடுத்த நாள் சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாவதால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

unknown node