அம்பானி போல் வசதியாக வாழ விரும்பவில்லை! நான் நானாகவே வாழ விரும்புகிறேன் : இயக்குனர் பாரதிராஜா

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி, கபடி வீராங்கனை ஜீவா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கென்னடி கிளப். இப்படம் ஆகஸ்ட் 15-ம்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், பாரதிராஜா, சசிகுமார், மீனாட்சி, கபடி வீராங்கனை ஜீவா உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் கென்னடி கிளப். இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி திரையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இப்படத்தின், பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய இயக்குனர் பாரதிராஜா, இதற்கு முன்பு சுசீந்தரனுடன் ஒரு படத்தில் நடித்தேன். ஆனால் இதில் ஒரு நல்ல குடும்பத்தோடு வாழ்ந்திருக்கிறேன். சினிமா என்றால் என்னாவென்றே தெரியாத கபடி வீராங்கனைகள் சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள். அர்ப்பணிப்போடு நடித்திருந்த இந்த பெண்களுக்கு நன்றி கூற வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சுசீந்திரன் போன்ற ஒரு மகனை பெற்றதற்கு நல்லுசாமி கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும், அம்பானி போல வசதியாக வாழ விரும்பவில்லை. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இயக்குனர் பாரதிராஜாவாகவே வாழ விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.