சண்டைக்கு வாடா… வம்படியாய் போட்டியாளர்களை வம்பிழுக்கும் அசீம்.! வைரலாகும் வீடியோ இதோ…

Default Image

பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி மும்மரமாக  2 வரமாக நடைபெற்று வரும்நிலையில், தினம் தினம் வீட்டிற்குள் ஏதேனும் சண்டைகள் வந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று தனலட்சுமியை ஆண்டி என்று அசல் கூறியதால் தனலட்சுமிக்கும் அசலுக்கு இடையே பெரிய வாங்குவதாம் நடைபெற்றது.

வழக்கமாக இதைப்போன்ற சண்டைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் 40 நாட்களுக்கு அடுத்தது தான் தொடங்கும். ஆனால், 6-வது சீசனில் 2 வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில், சண்டைகள் தொடங்கியுள்ளதால் நிகழ்ச்சியே பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், இன்று இரண்டு ப்ரோமோக்கள் வெளியாகியுள்ளது. 1 ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களை தங்களுக்குள்ளாக 13 வரை ரேங்கிங் செய்துகொள்ள பிக் பாஸ் கூறுகிறார் அப்பொழுது அசீம் மகேஸ்வரி, விக்ரமன், மற்றும் ஆயிஷா போன்றவர்களை குறித்து மட்டமான கருத்துக்களை தெரிவிக்கிறார்.ஆயிஷா தகுதியே இல்லை” என கூறுகிறார்.

இதையும் படியுங்களேன்- பாரதிராஜா சொன்னது அந்த மாதிரி ஒரு உணர்வு கொடுத்துச்சு… ரகசியம் கூறும் பிரபல நடிகை.!

இதனால் சற்று கடுப்பான ஆயிஷா எதை வைத்து தன்னை தகுதி இல்லாத நபர் என்று சொன்னீங்க..? என்று கேட்க , அசீம் நீ தூங்குவதைத் தவிர வேற என்ன செய்ற..? என்று பதிலுக்கு கேட்டுள்ளார். மேலும் கடுப்பான ஆயிஷா சற்று கோபத்துடன் கத்தி பேசினார் ஒரு கட்டத்தில் அசீம் கோபத்தின் உச்சத்தில் ஆயிஷாவை ‘வாடி.., போடி’ என்று கூறினார். அதற்கு எதுக்கு வாடி போடி சொன்னீங்க என கேட்கிறார் ப்ரோமோவும் முடிகிறது.

பிறகு வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ” விக்ரமனுக்கும் அசீமிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடக்கிறது. வாடா போடா என அசீம் சண்டைபோடுகிறார். இந்த ப்ரோமோக்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அஸீம் உண்மையில் மற்றவர்களை ஒரு வித எளகாரத்துடனே பேசுகிறார் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்