டாக்டர் படத்தின் டிரைலர் இன்று வெளியீடு.!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் டிரைலர் இன்று வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் டிரைலர் இன்று வெளியாகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

unknown node

படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. மேலும், படத்தின் அடுத்த அப்டேட்டாக டாக்டர் படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு சன்டிவியின் யூடியூப் சேனலில் வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.

unknown node

கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

unknown node

அதன் பின் படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற குழம்பம் ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் நிறுவனம் வரும் அக்டோபர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அறிவித்தது.